பனிமய மாதா கோயில் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள்: எஸ்.பி. ஆலோசனை

வரும் 26 ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா நடைபெறவுள்ளது. இதையொட்டி,


வரும் 26 ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா நடைபெறவுள்ளது. இதையொட்டி, மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் தலைமையில் சனிக்கிழமை ஆலோசனை நடைபெற்றது.
ஆலய வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ஆலய பங்குத் தந்தை குமார் ராஜா, மாநகரக் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர். பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் பள்ளி பங்கு தந்தை வில்லியம் சந்தானம், திரேஸ்புரம் பங்கு தந்தை நோயல் மற்றும் தீயணைப்பு துறை, மின் வாரியம், சுகாதாரத் துறை,  மாநகராட்சி,  உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தின்போது, மாதா கோயில் வளாகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக புறக்காவல் நிலையம், கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பது, சாலையோர கடைகள் ஒருபுறம் மட்டும் அமைத்தல், ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து, புறக்காவல் நிலையத்தில் உள்ள ஒளித்திரை முலம் கண்காணித்தல், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், முக்கிய அறிவிப்புகளை தெரிவிக்கும் வகையில் ஒலிபெருக்கி அமைத்தல், தீயணைப்புத் துறையினர் 24 மணி நேரமும் தயார்நிலையில் இருத்தல், மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய மருத்துவக்குழு, 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் வசதி, பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் தற்காலிக மின்விளக்குகள் அமைப்பது உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com