மக்கள் நீதிமன்றம்: தூத்துக்குடி மாவட்டத்தில் 1,819 வழக்குகளுக்கு தீர்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில், 1,819 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.


தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில், 1,819 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம், சாத்தான்குளம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 6 இடங்களில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மக்கள் நீதிமன்றம் மூலம் சமரசத் தீர்வு காணும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தற்போதைய நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்ட 12 அமர்வுகள் வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டன. 
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் 3007 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் 1636 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் 4 கோடியே 32 லட்சத்து 90 ஆயிரத்து 749 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.
இதேபோல், வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முந்தைய காலக்கட்டத்தில் உள்ள 2110 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 183 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம், ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.
மாவட்டம் முழுவதும் 6 இடங்களில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலமாக மொத்தம் 1819 வழக்குகளுக்கு முடிவு காணப்பட்டு 5 கோடியே 92 லட்சத்து 90 ஆயிரத்து 749 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது என மாவட்ட முதன்மை நீதிபதி சுரேஷ் விஸ்வநாத் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சியில், மாவட்ட கூடுதல் முதன்மை நீதிபதி சிவஞானம், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஹேமா, மக்கள் நீதிமன்ற நீதிபதி முருகேசன், சார்பு நீதிபதி சாமுவேல் பெஞ்சமின் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கோவில்பட்டி: கோவில்பட்டியில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில், சார்பு நீதிமன்ற நீதிபதி எம்.அகிலாதேவி தலைமையில், மாவட்ட உரிமையியல் நீதிபதி வி.முரளிதரன், குற்றவியல் நீதிமன்ற நடுவர்கள் சுப்பிரமணியன், சரவணகுமார், அரசு வழக்குரைஞர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலையில் 462 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.
சாத்தான்குளம்: சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்துக்கு, மாவட்ட உரிமையியல் நீதிபதி ரமேஷ் தலைமை வகித்தார். குற்றவியல் நீதிபதி சரவணன் முன்னிலை வகித்தார். இதில், 321 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ. 4.40 லட்சம் வசூலிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com