சாத்தான்குளத்தில் சைவ வேளாளர் சங்கக் கூட்டம்
By DIN | Published On : 24th July 2019 07:29 AM | Last Updated : 24th July 2019 07:29 AM | அ+அ அ- |

சாத்தான்குளம் வட்டார சைவ வேளாளர் சங்க செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, முருகன் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற பேரூராட்சி அலுவலர் விக்ரமன்முன்னிலை வகித்தார். அமைப்பாளர் வெங்கடாசலம், தலைவர் ஆறுமுகம், பொருளாளர் அழகப்பன் உள்பட பலர் பேசினர். சங்க செயற்குழு உறுப்பினர்கள் ஜோதி தண்டாயுதபாணி, பரமசிவன், சுயம்புலிங்கம், முருகேசபாண்டி, ஆறுமுகராஜா, கந்தப்பன், சுடலைமுத்து, வீரபாகு, சண்முகசுந்தரம், கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தீர்மானங்கள்: மத்திய அரசு அறிவித்துள்ள முற்பட்ட பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும்; சாத்தான்குளம் வட்டாரத்திலுள்ள குளங்களை புனரமைத்து நீர் ஆதாரத்தை மேம்படுத்த வேண்டும்; மின்வாரியத்தில காலியாக இருக்கும் வயர்மேன் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; பொதுமக்களுக்கு தடையின்றி மின்சாரம் விநியோகம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மீனாட்சி சுந்தரம் நன்றி கூறினார்.