Enable Javscript for better performance
அரசுப் பள்ளியில் மாரடைப்பால் ஆய்வக உதவியாளர் மரணம்- Dinamani

சுடச்சுட

    

    ஓட்டப்பிடாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளர் மாரடைப்பால்  உயிரிழந்தார்.
    முடிவைத்தானேந்தல் ,  புதூர் பகுதியைச் சேர்ந்தவர் இ.பெருமாள்(57). ஓட்டப்பிடாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர், இருதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாராம். சில வேளைகளில் பள்ளி வளாகத்திலேயே இரவு தங்கிவிடுவது வழக்கமாம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு பள்ளி வளாக அறையில் தங்கிய அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு  வாசலில் இறந்து கிடந்தார். இதுகுறித்து புதன்கிழமை தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் போலீஸார் அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai