Enable Javscript for better performance
ஆத்தூர் அருகே பாதயாத்திரை பக்தரிடம் வழிப்பறி முயற்சி: இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ஆத்தூர் அருகே பாதயாத்திரை பக்தரிடம் வழிப்பறி முயற்சி: இளைஞர் கைது

    By DIN  |   Published on : 25th July 2019 06:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆத்தூர் அருகே பாதயாத்திரை பக்தரிடம் அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
    முக்காணி, காமராஜர் நகரை சேர்ந்த ராமசாமி மகன் கனகராஜ்(43).  தொழிலாளி. இவர், செவ்வாய்க்கிழமை ஊரிலிருந்து திருச்செந்தூர் கோயிலுக்கு பாதயாத்திரையாகப் புறப்பட்டுச் சென்றார்.  தெற்கு ஆத்தூர் கொலுவை நல்லூர் விலக்கில் அவரை, இளைஞர் ஒருவர் வழிமறித்து பணம் தருமாறு  அரிவாளை காட்டி மிரட்டினாராம். அவரிடமிருந்து தப்பிய கனகராஜ், ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆய்வாளர் கிங்ஸ்லிலி தேவானந் விசாரித்ததில்,  தூத்துக்குடி, சாந்திநகரைச் சேர்ந்த  முத்துராஜ் மகன் மாரிமுத்து(32) என்பவர்தான் மிரட்டியவர் என தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸார்,  அவரிடமிருந்து மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai