Enable Javscript for better performance
ஆறுமுகனேரியில் இன்றுரயில்வே கேட் மூடும் நேரம் மாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    ஆறுமுகனேரியில் இன்றுரயில்வே கேட் மூடும் நேரம் மாற்றம்

    By DIN  |   Published on : 25th July 2019 06:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆறுமுகனேரியில் கேட் மற்றும் தண்டவாளப்பணிக்காக  ரயில்வே கேட் வியாழக்கிழமை (ஜூலை 25) மூடப்படும் நேரம்  மாற்றப்பட்டுள்ளது. 
    ஆறுமுகனேரி ரயில்வே கேட், வியாழக்கிழமை காலை 8 முதல் மாலை 6 மணி வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நேரத்தில் பள்ளி மற்றம் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள்,  அலுவலகப் பணிக்கு செல்வோர் பாதிக்கப்படுவர்.
    மேலும், பேருந்துகள் ஆறுமுகனேரிக்கு வராமல் காயல்பட்டினம் புறவழிச்சாலை வழியாக செல்வதால் பல்வேறு இடர்பாடுகள் இருப்பதாக கூறி, இரவு நேரத்தில் பணி மேற்கொள்ளும்படி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து, ரயில்வே வளர்ச்சி குழு ஒருங்கிணைப்பாளர் இரா.தங்கமணி, ரயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தியதன் பேரில், 25ஆம் தேதி காலை 9.30 மணிமுதல் மாலை 4 மணிவரை ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கும் என்று ரயில்வே நிர்வாகம் புதன்கிழமை அறிவித்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai