Enable Javscript for better performance
ஆறுமுகனேரி கோயில்களில் திருவிளக்குப் பூஜை- Dinamani

சுடச்சுட

    

    ஆறுமுகனேரி கோயில்களில் செவ்வாய்க்கிழமை இரவு திருவிளக்குப் பூஜை நடைபெற்றது. 
    ஆறுமுகனேரி காந்தி தெருவைச் சேர்ந்த அருள்மிகு கிழக்கத்திமுத்து சுவாமி  திருச்சேர்ந்த நடுத்தெரு அருள்மிகு பிரம்மசக்தி அம்மன் திருக்கோயிலில் ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. நந்தினி திருவிளக்குப்பூஜையை நடத்தி வைத்தார். சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜையை பிரம்மநாயகம் நடத்தி வைத்தார். ஏற்பாடுகளை பி.கெளரி , வெ.குணசுந்தரி ஆகியோர் செய்திருந்தனர்.  பூவரசூர் அருள்மிகு பொடிப்பிள்ளை அம்மன் திருக்கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.  அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. பூஜையை ரா.சுந்தர் நடத்தினர். திரளான பெண்கள் பங்கேற்று திருவிளக்கேற்றி வழிபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai