Enable Javscript for better performance
இளையரசனேந்தலில் இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், இளையரசனேந்தலில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
    ஆர்ப்பாட்டத்தில், "இளையரசனேந்தல் குறுவட்டம் ஊராட்சிகளை, குருவிகுளம் ஒன்றியத்திலிருந்து நீக்கி, கோவில்பட்டி ஒன்றியத்தில் இணைக்க வேண்டும்; அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்  தட்டுப்பாடின்றி ரேஷன் பொருள்கள் வழங்க வேண்டும்; படைப்புழுவால் பாதிக்கப்பட்டுள்ள மக்காச்சோளம் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்; 2018-19ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
    ஆர்ப்பாட்டத்தில்,  மாவட்டச் செயலர் அழகுமுத்துப்பாண்டியன் விளக்கிப் பேசினார்.  கிளைச் செயலர் இன்னாசிமுத்து, தங்கம், மாரியம்மாள், துணைச் செயலர் சேதுராமலிங்கம், மாவட்டக் குழு உறுப்பினர் பரமராஜ், வட்டச் செயலர் பாபு, கோவில்பட்டி நகரச் செயலர் சரோஜா உள்பட பலர் பங்கேற்றனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai