Enable Javscript for better performance
எட்டயபுரத்தில் இன்றைய மறியல் போராட்டம் ரத்து- Dinamani

சுடச்சுட

    

    எட்டயபுரத்தில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வுகாண,  பேரூராட்சி நிர்வாகம், குடிநீர் வடிகால் வாரியம் தவறிவிட்டதாகக் கண்டனம் தெரிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வியாழக்கிழமை நடைபெறவிருந்த மறியல் போராட்டம், வட்டாட்சியர் பேச்சுவார்த்தையால் ரத்து செய்யப்பட்டது.
    வட்டாட்சியர் அழகர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டக் குழுவினர் மற்றும் பேரூராட்சி, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் வியாழக்கிழமை முதல் நாளொன்றுக்கு எட்டயபுரத்துக்கு 7 லட்சம் லிட்டர் குடிதண்ணீர் வழங்கப்படும். பேரூராட்சி நிர்வாகம் மூலம் குடிநீர் விநியோகம் நான்கு நாள்களுக்கு ஒரு முறை சீராக வழங்கப்படும். தேவைப்படும்பட்சத்தில் தற்காலிக  ஏற்பாடாக லாரிகள் மூலம் அனைத்து வார்டுகளிலும் குடிதண்ணீர் விநியோகம் செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையேற்று வியாழக்கிழமை (ஜூலை 25) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மறியல் போராட்டத்தை போராட்ட குழுவினர் திரும்பப் பெற்றனர்.
     கூட்டத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரவேல், குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் செந்தூர்பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் நல்லையா, தாலுகா செயலர் கிருஷ்ணமூர்த்தி, நகர செயலர் சேது, உதவி செயலர் முனியசாமி, நகர குழு உறுப்பினர் ஹரிஹரசுதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai