Enable Javscript for better performance
காரப்பேட்டை பள்ளியில் 450 மாணவர்களுக்கு மடிக்கணினி- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 450 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
    தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு, காரப்பேட்டை நாடார் மகமை பொதுக்குழு உறுப்பினர் நடராஜன் தலைமை வகித்தார். பள்ளிச் செயலர் என்.டி. செல்வராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கால்டுவெல் மேல்நிலைப் பள்ளி தாளாளரான அதிமுக அமைப்புச் செயலர் சி.த. செல்லப்பாண்டியன் கலந்து கொண்டு 450 மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.
     நிகழ்ச்சியில்,  தலைமையாசிரியர் எஸ். கணேசன், உதவித் தலைமையாசிரியர் பால்ராஜ், மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் பிடிஆர் ராஜகோபால், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலர் சி.த.செ. ஜெபசிங் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai