Enable Javscript for better performance
கோவில்பட்டியில் மழை வேண்டி பால்குட ஊர்வலம்- Dinamani

சுடச்சுட

    

    மழை பொழிய வேண்டி, ஹரிஹரன் ஐயப்ப பக்தர்கள் சேவா டிரஸ்ட் சபரிமலை தமிழ் மாத யாத்திரை குழு சார்பில், கோவில்பட்டியில் பால்குட ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
    தொழில், வியாபாரம், கல்வி, பொதுமக்கள் நலன் சிறக்கவும், மழை வேண்டியும் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் மண்டபத்தில், இக்குழு சார்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 
    முன்னதாக, ஐயப்பன் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு, கோயில் வளாகத்திலிருந்து 201  பால்குடங்களை பக்தர்கள் சுமந்து சென்றனர்.  முக்கிய சாலைகள் வழியாக மீண்டும் கோயில் வளாகத்தில் ஊர்வலம் நிறைவடைந்தது. பின்னர், சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai