Enable Javscript for better performance
கோவில்பட்டி புற்று கோயிலில் ஆடித் தவசு கால்நாட்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி புற்று கோயிலில் ஆடித் தவசு கால்நாட்டு விழா

    By DIN  |   Published on : 25th July 2019 06:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக் கோயிலில் ஆடித்தவசு கால்நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
    இதையொட்டி, கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பல்வேறு சிறப்பு பூஜைகளும், அபிஷேக, அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன. 
    தொடர்ந்து, விநாயகர் சன்னதி முன் ஆடித்தவசு விழாவிற்கான கால்நாட்டப்பட்டது. பக்தர்கள் பசு கோமியம், மஞ்சள் பால், பசும்பால் ஊற்றி வழிபட்டனர். பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்திருந்தார். ஆடித்தவசு விழா ஆகஸ்ட் 13ஆம் தேதி நடைபெறுகிறது. 
    விழாவில், கோயில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணி, செயலர் சுப்பையா உள்பட கோயில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள், பக்தர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai