Enable Javscript for better performance
தமிழகத்திலும் விரைவில் பாஜக ஆட்சி அமையும்- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்திலும் விரைவில் பாஜகவின் ஆட்சி அமையும் என்றார், பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன்.
    தூத்துக்குடியில் புதன்கிழமை அவர் அளித்த பேட்டி:  மக்களவைத் தேர்தலில் தமிழக பாஜக பின்னடைவை சந்தித்தாலும், பாஜகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இப்போது நடைபெறும் உறுப்பினர் சேர்க்கையில் அதிகமானோர் பாஜகவில் சேர்ந்து வருகின்றனர்.
    காங்கிரஸில் கட்சியை நிர்வகிக்க ஒரு நிர்வாகியைக்கூட நியமிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்ததற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைகுனிய வேண்டும்.
    தமிழைத் தாங்கள்தான் காப்பாற்றி வருவதுபோன்ற தோற்றத்தை திமுகவினர் உருவாக்கி வருகின்றனர். 
    மத்திய அரசு எந்த விதத்திலும் ஹிந்தியை தமிழகத்தில் திணிக்காது. அப்படி ஒரு நிலைமை வந்தால் அதைத் தடுக்க தமிழக பாஜக மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கும்.
    புதிய கல்விக் கொள்கை குறித்து கருத்துத் தெரிவிக்க வேண்டியது கல்வியாளர்களும், குழந்தைகளும்தான். அதைவிடுத்து, இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும், அக்கொள்கையே தவறு என்றும் அரசியல் கட்சியினர் கூறுவது ஏற்க முடியாதது. 
    புதிய கல்விக் கொள்கையில் அரசியலை புகுத்தாதீர்கள். புதிய கல்விக் கொள்கை குறித்து தவறான கருத்துகளைக் கூறினால், மக்கள் மனதில் அக்கருத்தே பதிந்துவிடும்.
    மக்களவையில் 37 பேரைக் கொண்ட திமுகவில் கனிமொழி, ஆ. ராசா, டி.ஆர். பாலு, தயாநிதிமாறனைத் தவிர மற்றவர்களுக்கு பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுதான் அக்கட்சிக்குள் இருக்கும் சர்வாதிகாரம். 37 பேருக்கு சம வாய்ப்பு அளிக்க வேண்டும்.
    வெளிநாட்டில் உள்ள இந்தியர்களின் கருப்புப் பணம் குறித்த தகவல்கள் கிடைப்பதில் அந்நாட்டு வங்கிகளின் சட்டப்படி சிக்கல்கள் உள்ளன. எனவே, அத்தகவல்களைப் பெற மத்திய அரசு சிறப்புப் புலனாய்வுக் குழுக்களை கடந்த பருவத்தில் அமைத்துள்ளது.
    கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமையவுள்ளது. 
    அங்கிருந்து தமிழகத்துக்கு 7 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது; தண்ணீர் வருவதால் தாமரை மலரும். எனவே, தமிழகத்திலும் விரைவில் பாஜகவின் ஆட்சி அமையும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai