Enable Javscript for better performance
திருச்செந்தூர் உச்சினிமாகாளி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு- Dinamani

சுடச்சுட

    

    திருச்செந்தூர் உச்சினிமாகாளி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு

    By DIN  |   Published on : 25th July 2019 06:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செந்தூர் சைவ வேளாளர் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட அருள்தரும் உச்சினிமாகாளி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு விழா நடைபெற்றது. 
    இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை இரவு அம்மனுக்கு மாக்காப்பு அலங்காரமும், திங்கள்கிழமை இரவு சந்தனக்காப்பு அலங்காரமும் நடைபெற்றன. 
    செவ்வாய்க்கிழமை பகலில் உச்சினிமாகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மாலையில் திருச்செந்தூர் சைவ வேளாளர் ஐக்கிய சங்க வளாகத்தில், முளைப்பாரிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, ஆடி விரதம் இருந்துவந்த பக்தர்கள் மேளதாளம் முழங்க, முளைப்பாரி எடுத்து ரதவீதிகள் வழியாக வலம் வந்து உச்சினிமாகாளியம்மன் கோயில் சேர்ந்தனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றன. விழாவில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். புதன்கிழமை காலை முளைப்பாரி கடலில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை சைவ வேளாளர் ஐக்கிய சங்கத்தினர் செய்திருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai