Enable Javscript for better performance
தூத்துக்குடியில் நாளை  தனியார் துறை  வேலைவாய்ப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடியில் நாளை  தனியார் துறை  வேலைவாய்ப்பு முகாம்

    By DIN  |   Published on : 25th July 2019 06:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி, ஆசிரியர் காலனி 1 ஆம் தெருவில் உள்ளமாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 26 ) நடைபெறுகிறது.
    வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் இம்முகாமில், பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதால்,  பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள், தங்களது பயோடேட்டா மற்றும் கல்வி சான்றுகளுடன் கலந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 0461-2340159 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பேச்சியம்மாள் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai