Enable Javscript for better performance
நாசரேத்தில் ஆதார் சேவை சிறப்பு முகாம் இன்று நிறைவு- Dinamani

சுடச்சுட

    

    நாசரேத் அஞ்சலகம் சார்பில் திங்கள்கிழமை தொடங்கிய ஆதார் சேவை சிறப்பு முகாம் வியாழக்கிழமை (ஜூலை 25) நிறைவடைகிறது.
    இதுகுறித்து நாசரேத் அஞ்சலக அலுவலர் ரவி மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட அஞ்சல் துறை கோட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீஜா உத்தரவின் பேரில்,  ஆதார் சேவை முகாம் நாசரேத் அஞ்சலக  அலுவலகம் மற்றும்  நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்து திங்கள்கிழமை தொடங்கியது. இம்முகாமில், புதிய ஆதார் அட்டை பெறுவது,  ஆதார் அட்டையில்  பெயர் மாற்றம்,  பிறந்த தேதி திருத்தம்,  முகவரி திருத்தம், செல்லிடப்பேசி  எண் இணைப்பு போன்ற சேவைகளும்  மேற்கொள்ளப்படுகின்றன. 
    இதற்கு சேவை கட்டணமாக  ரூ.50 செலுத்த வேண்டும்.  மேலும்,  அஞ்சலக அலுவலக சேமிப்பு கணக்குக்கு இணையதள வங்கி கணக்கு தொடங்கி தரப்படும். இச்சேவை வியாழக்கிழமையுடன் (ஜூலை 25) நிறைவடைகிறது எனத் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai