Enable Javscript for better performance
பிரத்தியங்கிராதேவி கோயிலில் 31இல் பெண்கள் நடத்தும் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    பிரத்தியங்கிராதேவி கோயிலில் 31இல் பெண்கள் நடத்தும் திருவிழா

    By DIN  |   Published on : 25th July 2019 06:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆடி அமாவாசையை முன்னிட்டு, தூத்துக்குடி பிரத்தியங்கிராதேவி கோயிலில் இம்மாதம் 31ஆம் தேதி பெண்கள் நடத்தும் திருவிழா நடைபெறுகிறது.
     இதுகுறித்து தூத்துக்குடி ஸ்ரீ மஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீட நிர்வாகி சீனிவாச சித்தர் அளித்த பேட்டி:
     தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தில், ஆடி அமாவாசையை முன்னிட்டு, ஜூலை 31 ஆம் தேதி ஸ்ரீ மஹா பிரத்தியங்கிராதேவி, ஸ்ரீ மஹாலட்சுமி, சரஸ்வதி தேவியர்களுக்கு பெண்களே நடத்தும் சிறப்பு வழிபாட்டுத் திருவிழா நடைபெறுகிறது.
    கோயிலில் காலை 10 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமமும், முற்பகல் 11 மணிக்கு சுமங்கலி பூஜையும் நடைபெறுகின்றன. நண்பகல் 12 மணிக்கு ஸ்ரீ மஹா பிரத்தியங்கிராதேவி, காலபைரவர், ஸ்ரீ மஹாலட்சுமி, சரஸ்வதிதேவி ஹோமமும், 12.30 மணிக்கு அன்னையருக்கு தாய்மார்களே நடத்தும் மஹா அபிஷேகங்களும், சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெறுகின்றன. தொடர்ந்து, பிற்பகல் 2 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai