Enable Javscript for better performance
10 இடங்களில் நாளை அம்மா திட்ட முகாம்- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் வெள்ளிக்கிழமை (ஜூலை 26) அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.
    அதன்படி, தூத்துக்குடி வட்டத்தில் கீழத்தட்டப்பாறை- அல்லிகுளம்  கிராமத்திலும், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் வல்லநாடு கஸ்பாவிலும், திருச்செந்தூர் வட்டத்தில் மேலத்திருச்செந்தூரிலும், சாத்தான்குளம் வட்டத்தில் நடுவக்குறிச்சியிலும், கோவில்பட்டி வட்டத்தில் கிளவிபட்டியிலும், விளாத்திகுளம் வட்டத்தில் சக்கம்மாள்புரத்திலும் முகாம் நடைபெறும்.
    எட்டயபுரம் வட்டத்தில் ராஜாப்பட்டியிலும், ஓட்டப்பிடாரம் வட்டத்தில் பாறைக்குட்டத்திலும், கயத்தாறு வட்டத்தில் கட்டாரங்குளத்திலும், ஏரல் வட்டத்தில் அகரம் - மஞ்சள்நீர்காயலிலும் முகாம் நடைபெறுகிறது.
    இம்முகாம்களில் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு - இறப்பு சான்றுகள், சாதிச் சான்றுகள் மற்றும் வருவாய் துறைக்கு உள்பட்ட கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடி தீர்வு காணப்படும். இந்த வாய்ப்பை அந்தந்த பகுதி மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி  செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai