உடன்குடியில் அஹ்மதிய்யா ஜமாஅத் மாநாடு
By DIN | Published On : 29th July 2019 07:08 AM | Last Updated : 29th July 2019 07:08 AM | அ+அ அ- |

அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் தூத்துக்குடி, திருநெல்வேலி, குமரி மாவட்ட முதியோர் அணி மாநாடு உடன்குடியில் நடைபெற்றது.
புதுமனை அஹ்மதிய்யா பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்ற இம்மாநாட்டுக்கு அமைப்பின் மேலிடப் பிரதிநிதி சுலைமான் தலைமை வகித்தார். ரஹ்மத்துல்லா, அன்வர் அஹமது ஆகியோர் திருக்குர் ஆன் ஓதினர். அலிமுல்லா, பக்ரூதீன் ஆகியோர் உருதுப்பாடல் பாடினர்.
மாநாட்டில், அமைப்பின் 3 மாவட்டத் தலைவர் நிஜாமுத்தீன், ஜமாஅத் தலைவர்கள் அப்துல்காதர், நாசிர் அஹமது, கலீல் அஹமது, அப்துல்காதர், அப்துல்ரஹ்மான், சுஹைல், பண்டாரஞ்செட்டிவிளை சேகரகுரு ஜான்சாமுவேல் ஆகியோர்பேசினர். ஏற்பாடுகளை உடன்குடி முதியோர் அணித் தலைவர் சிராஜூதீன், இளையோர் அணித் தலைவர் முகமது அலி, நிர்வாகிகள் ஷாஜகான், தாஹிர் ஆகியோர் செய்திருந்தனர்.
மாநாட்டுக்குழுத் தலைவர் ஜலாலுதீன் வரவேற்றார். பஷீர் அஹமது ஆண்டறிக்கை வாசித்தார்.