முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
உலக இயற்கை பாதுகாப்பு தினம்
By DIN | Published On : 30th July 2019 07:38 AM | Last Updated : 30th July 2019 07:38 AM | அ+அ அ- |

சாத்தான்குளம் செயிண்ட் ஜான்ஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் சிகரம் அறக்கட்டளை சார்பில் உலக இயற்கை பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் சார்லஸ் ஞானகுமார் தலைமை வகித்தார். அஞ்சலக அதிகாரிகள் கோயில்ராஜ், மரியரூபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீதிமன்ற பணியாளர் மகேந்திரன் வரவேற்றார் . ஓய்வு பெற்ற வட்டாட்சியர் ஓ.சு.நடராஜன் காடுகள், மரங்கள், நீர், மண் வளங்களை பாதுகாக்க வேண்டும் என பேசினார். இயற்கை பாதுகாப்பு குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டு, விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் ஆசிரியைகள் ஆனந்தி,வெண்ணிலா உள்பட பலர் கலந்துகொண்டனர்.