முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
தூத்துக்குடியில் கிராமக் கோயில் பூசாரிகள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 30th July 2019 07:41 AM | Last Updated : 30th July 2019 07:41 AM | அ+அ அ- |

மாத ஊக்கத் தொகை ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் கிராமக் கோயில் பூசாரிகள் பேரவையினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பூசாரிகளுக்கு மாத ஊக்கத் தொகை ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும், அரசு கோயில் அறங்காவலர் குழுவில் பூசாரி ஒருவரை சேர்க்க வேண்டும், ஆண்டு வருமான உச்ச வரம்பை ரூ. 72 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராமக் கோயில் பூசாரிகள் பேரவை சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பேரவையின் மாவட்ட அமைப்பாளர்கள் தி. சுப்பையா, எம்.சரவணன் ஆகியோர் தலைமை வகித்தனர். விஸ்வ ஹிந்து பரிசத் மாவட்டச் செயலர் வி.எஸ். பாண்டி முன்னிலை வகித்தார். கோரிக்கைகள் குறித்து பேரவையின் மண்டல அமைப்பாளர் ஆர். மாரியப்பன் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி பூசாரிகள் முழக்கங்களை எழுப்பினர். மேலும், சில பூசாரிகள் சிறிய அளவிலான மணியை அடித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.