முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
தூத்துக்குடியில் தொழிலாளி வெட்டிக் கொலை: இளைஞர் கைது
By DIN | Published On : 30th July 2019 07:39 AM | Last Updated : 30th July 2019 07:39 AM | அ+அ அ- |

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
தூத்துக்குடி சத்யா நகரைச் சேர்ந்தவர் கோபி (41). கூலித் தொழிலாளி. இவர், வேலை நிமித்தமாக சாயல்குடிக்கு சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு பேருந்தில் வீடு திரும்பினார். சத்யா நகர் நிறுத்தம் அருகே பேருந்தில் இருந்து இறங்கியபோது அடையாளம் தெரியாத நபர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டார். காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்ட கோபி, சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
இந்தக் கொலை தொடர்பாக தென்பாகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே, முன்விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸார் தெரிவித்தனர். கடந்த 2014 ஆம் ஆண்டு சத்யா நகரில் நடைபெற்ற கோயில் விழாவின்போது ஏற்பட்ட தகராறில் அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை கோபி அரிவாளால் வெட்டினாராம். அதற்கு பழிவாங்கும் வகையில் கொலை நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, கொலை தொடர்பாக சத்யா நகரை சேர்ந்த ரமேஷை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.