முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
விளாத்திகுளம் அருகே இளம்பெண் மரணம்
By DIN | Published On : 30th July 2019 07:14 AM | Last Updated : 30th July 2019 07:14 AM | அ+அ அ- |

விளாத்திகுளம் அருகே சேதுபுரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
சேதுபுரத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சுரேஷ்குமார் (28). இவரது மனைவி விஜி (26). கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றதாம். தனிகுடித்தனம் செல்வது தொடர்பாக தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி பிரச்னை ஏற்படுமாம். கடந்த 23ஆம் தேதி இருவரிடையே தகராறு ஏற்பட்டதாம். இந்நிலையில், ஜூலை 24 ஆம் தேதி வீட்டில் தனிமையில் இருந்த போது விஜி விஷம் குடித்து மயங்கி கிடந்தாராம். இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு அருப்புக்கோட்டை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் திங்கள்கிழமை உயிரிழந்தார். இது தொடர்பாக சங்கரலிங்கபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா விசாரணை நடத்தி வருகிறார்.