முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
வி.வேடபட்டி கிராமத்தில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் திறப்பு
By DIN | Published On : 30th July 2019 07:39 AM | Last Updated : 30th July 2019 07:39 AM | அ+அ அ- |

விளாத்திகுளம் அருகேயுள்ள வி. வேடபட்டி கிராமத்தில் ஏ.வி.டி. உணவு பொருள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் திறப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (திட்டம்) தங்கவேல் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பால ஹரிஹர மோகன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் கற்குவேல் வரவேற்றார். ஏ.வி.டி. உணவு தயாரிப்பு நிறுவனம் சார்பில் ரூ. 4 லட்சம் மதிப்பில் நாளொன்றுக்கு 2,000 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பெறும் வகையில் அமைக்கப்பட்ட குடிநீர் விநியோகத்தை ஏ.வி.டி. நிறுவன அலுவலர் விஜயகுமார் தொடங்கிவைத்தார். இதில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆபிரகாம் தனசிங், பொறியாளர் கருப்பையா, மின்வாரிய உதவிப் பொறியாளர் ஜோசப், களப்பாணியாளர் விக்னேஸ்வரன் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர்.