நாகலாபுரத்தில் கலாசார பண்பாட்டுப் போட்டிகள்

விவேகானந்தா கேந்திரம் சார்பில் நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல்நிலைப் பள்ளியில் கலாசார பண்பாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

விவேகானந்தா கேந்திரம் சார்பில் நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல்நிலைப் பள்ளியில் கலாசார பண்பாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சிக்கு,  பள்ளித் தலைமையாசிரியர் சாந்தி தலைமை வகித்தார்.  திட்ட ஒருங்கிணைப்பாளர் கனகாம்பாள் முன்னிலை வகித்தார்.  விளாத்திகுளம் , நாகலாபுரம், புதூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 120-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர். 
தேசிய ஒருமைப்பாடு, தனி மனித ஒழுக்கம், கலாசாரம், பண்பாடு உள்ளிட்ட தலைப்புகளில் பேச்சு, கட்டுரை, கவிதை, விநாடி- வினா போட்டிகள் நடத்தப்பட்டு, சிறப்பிடம் பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 
நிகழ்ச்சியில், விவேகானந்த கேந்திரத்தைச் சேர்ந்த பயிற்றுநர்கள் செண்பகம், மணிமேகலை மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ரமேஷ், சந்திரவேல், மோகன், சுரேஷ்குமார், அசோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com