ஸ்ரீவெங்கடேஸ்வரபுரத்தில் தூய்மை பாரத இயக்க விழா
By DIN | Published On : 30th July 2019 07:39 AM | Last Updated : 30th July 2019 07:39 AM | அ+அ அ- |

நேரு இளையோர் மையம், தேசிய இளையோர் பேரவை ஆகியவற்றின் சார்பில் தூய்மை பாரத இயக்க விழா ஸ்ரீவெங்கடேஸ்வரபுரத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு சேவா பாரதி இயக்க மாவட்டப் பொறுப்பாளர் முத்துலிங்கம் தலைமை வகித்தார். சிவக்குமார் வரவேற்றார். ஸ்ரீசுந்தராட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உழவாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து, 10 இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இப்பணியை ஊர் பிரமுகர் பாபு தொடங்கிவைத்தார். நிர்வாகிகள், சுடலைமுத்து, தடிக்காரதாஸ், சுவாமி விவேகானந்தர் நற்பணி மன்ற நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னாள் ஊராட்சி உறுப்பினர் சுந்தர்ராஜ் நன்றி கூறினார்.