உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல் தயாரித்தலுக்கு பயிற்சி

உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல் தயாரித்தல் தொடர்பான பயிற்சி வகுப்பு, தூத்துக்குடி மாவட்ட

உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல் தயாரித்தல் தொடர்பான பயிற்சி வகுப்பு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான பணிகள் மாநில தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக வாக்குச்சாவடி பட்டியல்கள் தயாரிக்கும் பணி முடித்து பட்டியல்கள் அச்சடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக சட்டப் பேரவைத் தொகுதி வாக்காளர் பட்டியல்களை அடிப்படையாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக சென்னையில் முதன்மை பயிற்சியாளர்களுக்கு தேர்தல் ஆணையத்தால் பயிற்சி அளிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட அளவில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பது தொடர்பாக, முதன்மை பயிற்றுநர்களால் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (பொது), தேர்தல் உதவியாளர்கள் உள்ளிட்டோருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் மு. வீரப்பன் தலைமை வகித்தார்.
இதில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) சந்திரசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் (தேர்தல்) பொற்செழியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com