தட்டார்மடத்தில் குடியிருப்புப் பகுதியில் குப்பைகளை எரிப்பதால் சுகாதாரக் கேடு

சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடத்தில் குடியிருப்பு  வீடுகள் மற்றும் சாலையோரத்தில் குப்பைகளை

சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடத்தில் குடியிருப்பு  வீடுகள் மற்றும் சாலையோரத்தில் குப்பைகளை கொட்டி எரிப்பதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தட்டார்மடத்திலிருந்து நடுவக்குறிச்சி செல்லும் சாலையோரம் குடியிருப்பு வீடுகள் அருகே குப்பைக் கிடங்கு அமைக்கப்பட்டு பல்வேறு பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.
குப்பைகள் அதிகம் சேர்ந்ததும் ஊராட்சி சார்பில் தீ வைத்து எரிக்கப்படுகிறது. அப்போது எழும் புகையால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.  குடியிருப்புகள் அருகே குப்பைகள் கொட்டப்படுவதால் அதிலிருந்து வரும் துர்நாற்றம் காரணமாக தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், குப்பைகளை எரிப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 
எனவே, இப்பகுதியில் குப்பைகளை கொட்டி எரிக்காமல், குடியிருப்புகள் இல்லாத வேறு பகுதியில் குப்பைக் கிடங்கை அமைத்து அதில் குப்பைகளை கொட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com