Enable Javscript for better performance
ஆத்தூர் கோயிலில் சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    ஆத்தூர் கோயிலில் சிறப்பு வழிபாடு

    By DIN  |   Published on : 04th June 2019 09:22 AM  |   அ+அ அ-   |    |  

    ஆத்தூர் அருள்மிகு சோமசுந்தரி அம்பாள் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலில்  திங்கள்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.               
    ஆத்தூர் அருள்மிகு  சோமசுந்தரி அம்பாள் சமேத  சோமநாத சுவாமி திருக்கோயிலில் நீண்ட காலமாக திருப்பணிகளும் , திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழாவும் நடைபெறாதிருந்தது. இது குறித்து பக்தர்கள்  தமிழக அரசுக்கும், 
    அறநிலையத் துறைக்கும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் , திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா திருப்பணிகளுக்கான பாலாலய விழா வியாழக்கிழமை(ஜூன் 6)  காலை 8:35 மணியிலிருந்து 10:45 மணிக்குள் நடைபெறும்  என அறநிலையத்துறை அறிவித்துள்ளது. 
    அதற்கான தொடக்க விழா திங்கள்கிழமை  மஹா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.  தொடர்ந்து  கோமாதா பூஜையும்,  நவக்கிரஹ ஹோமமும் நடைபெற்றது. இதில்  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை  திருக்கோயில்  செயல் அலுவலர் (பொ) கிருஷ்ணமூர்த்தி  மற்றும் திருக்கோயில் அர்ச்சகர் ஹரிஹர சுப்ரமணிய பட்டர் ஆகியோர் செய்திருந்தனர்.


     

    kattana sevai