ஜமாபந்தி: விளாத்திகுளத்தில் ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
By DIN | Published On : 19th June 2019 06:59 AM | Last Updated : 19th June 2019 06:59 AM | அ+அ அ- |

விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் 101 பயனாளிகளுக்கு ரூ.10.08 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.
5ஆவது நாளான செவ்வாய்க்கிழமை வேம்பார், குளத்தூர் குறுவட்டத்துக்குள்பட்ட பல்லாகுளம், இ.வேலாயுதபுரம், கே.தங்கம்மாள்புரம், குளத்தூர் (கிழக்கு) குளத்தூர் (தெற்கு), குளத்தூர் (வடக்கு), வைப்பார் பகுதி 1, வைப்பார் பகுதி 2, கல்லூரணி, பூசனூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த வருவாய் கணக்குகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
மேலும் அப்பகுதி பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்றுக்கொண்டார்.
முகாமில் 36 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, 55 பேருக்கு பட்டா மாறுதல், 10 நபர்களுக்கு குடும்ப அட்டை என 101 பயனாளிகளுக்கு ரூ.10.08 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். நிகழ்ச்சியில், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் பி. சின்னப்பன், விளாத்திகுளம் வட்டாட்சியர் ராஜ்குமார், துணை வட்டாட்சியர்கள் நிஷாந்தினி, ரத்தினசங்கர், சுசீலா, வட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணகுமார், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் கணேசன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.