உடன்குடியில் பாஜக ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 23rd June 2019 12:59 AM | Last Updated : 23rd June 2019 12:59 AM | அ+அ அ- |

உடன்குடி கிராமப் பகுதிகளில் நிறுத்தப்பட்ட சிற்றுந்துகளை மீண்டும் இயக்கக் கோரி, ஒன்றிய பாஜக சார்பில் உடன்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றிய பாஜக தலைவர் திருநாகரன் தலைமை வகித்தார். நகரத் தலைவர் கா.ஜெயக்குமார், ஒன்றிய பொதுச்செயலர் அழகேசன், அமைப்பு செயலர் சிவந்திவேல், மாவட்ட விவசாய அணிச் செயலர் செந்தூர்பாண்டி, ஒன்றிய துணைத் தலைவர்கள் பசுபதி சிவசிங், சங்கரகுமார் ஐயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாஜக மாவட்டச் செயலர் இரா.சிவமுருகன் ஆதித்தன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாவட்ட இளைஞரணிச் செயலர் ஐயப்பன், ஒன்றிய விவசாய அணிச் செயலர் கருப்பசாமி, கேந்திர தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட இலக்கிய அணி செயலர் சின்னத்துரை, ஒன்றிய வர்த்தக அணி தலைவர் நாராயணன் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.