கோவில்பட்டியில் திமுக பொதுக்கூட்டம்
By DIN | Published On : 23rd June 2019 12:59 AM | Last Updated : 23rd June 2019 12:59 AM | அ+அ அ- |

கோவில்பட்டி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் கருணாநிதியின் 96ஆவது பிறந்த நாள் விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு மேற்கு ஒன்றிய திமுக செயலர் பீக்கிலிபட்டி வீ.முருகேசன் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய துணைச் செயலர் மேனகா, ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் சுப்புராஜ், விவசாய அணி துணை அமைப்பாளர் தர்மராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் அந்தோணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., கட்சியின் அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், வடக்கு மாவட்ட துணைச் செயலர் ஏஞ்சலா, மாநில விவசாயத் தொழிலாளரணிச் செயலர் சுப்பிரமணியன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ராமர், மகளிரணி அமைப்பாளர் விஜயலட்சுமி, வழக்குரைஞரணி அமைப்பாளர் ராமசந்திரன், மாவட்ட இலக்கிய அணித் தலைவர் சோழபெருமாள், நகரச் செயலர் கருணாநிதி, துணைச் செயலர் காளியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் செல்வமணிகண்டன் வரவேற்றார். ஊராட்சி கழகச் செயலர் முனியசாமி நன்றி கூறினார்.