தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து
By DIN | Published On : 23rd June 2019 01:03 AM | Last Updated : 23rd June 2019 01:03 AM | அ+அ அ- |

கழுகுமலையையடுத்த கூலையத்தேவன்பட்டியில் உள்ள தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் தீப்பெட்டி தயாரிக்கும் இயந்திரத்தின் ஒருபகுதி சேதமடைந்தது.
கோவில்பட்டி தெப்பக்குளத் தெருவைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி மகன் பொன்ராஜ். இவர் கழுகுமலையையடுத்த கூலையத்தேவன்பட்டியில் தீப்பெட்டி ஆலை நடத்தி வருகிறார். தீப்பெட்டி ஆலை சனிக்கிழமை வழக்கம்போல் செயல்பட்டுக் கொண்டிருந்தபோது, தீப்பெட்டி தயாரிக்கும் இயந்திரத்தின் ஒருபகுதியில் திடீர் தீ ஏற்பட்டது. தகவலறிந்தவுடன் கழுகுமலை தீயணைப்புப் படை வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். இருப்பினும், இயந்திரத்தின் ஒரு பகுதி தீயில் கருகி சேதமடைந்தது. இதுகுறித்து கழுகுமலை போலீஸார் வழக்குப் பதிந்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.