கணினி பயிற்றுநர் தேர்வு: 599 பேர் பங்கேற்பு
By DIN | Published On : 24th June 2019 10:22 AM | Last Updated : 24th June 2019 10:22 AM | அ+அ அ- |

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மேல்நிலைப் பள்ளிகளில் கணினி பயிற்றுநர் பணிக்கு நடைபெற்ற தேர்வில் 599 பேர் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் கணினி பயற்றுநர் பணிக்கான தேர்வு இணையதளம் மூலம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் இத்தேர்வுக்காக மூன்று மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட இத்தேர்வினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலக அதிகாரிகள் கண்காணித்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வல்லநாடு இன்பென்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி, நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி மற்றும் வி.வி. பொறியியல் கல்லூரிகளில் நடைபெற்ற இத்தேர்வில் 599 பேர் கலந்து கொண்டனர்.