கோவில்பட்டியில் மகிழ்வோர் மன்றக் கூட்டம்
By DIN | Published On : 24th June 2019 10:23 AM | Last Updated : 24th June 2019 10:23 AM | அ+அ அ- |

கோவில்பட்டி: கோவில்பட்டியில் மகிழ்வோர் மன்றக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் லட்சுமணப்பெருமாள் தலைமை வகித்தார். கண்தான இயக்க பொறுப்பாளர் ஜெயராஜ் முன்னிலை வகித்தார். அமைப்பின் காப்பாளர் செல்வின் அறிக்கை வாசித்தார்.
கூட்டத்தில், கவிஞர் நந்தலாலா "சிரிக்க அதற்கு தக' எனும் தலைப்பில் பேசினார். இதையடுத்து, தமிழ் தொண்டு செய்து வரும் பாரதி ஆய்வாளர் இளசைமணியனுக்கு பாரதி நேசன் விருது வழங்கப்பட்டது. மாணவர்கள் பங்கேற்ற பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மன்ற இயக்குநர் ஜான்கணேஷ், காப்பாளர் துரைராஜ், உரத்த சிந்தனை வாசகர் வட்ட நிர்வாகி சிவானந்தம், தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி உதவி மேலாளர் சுப்பையா, நாடார் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியை செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர். காப்பாளர் மோகன்ராஜ் வரவேற்றார். சேர்மத்துரை நன்றி கூறினார்.