தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

தூத்துக்குடி மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில்

தூத்துக்குடி மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) சேர ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிப்பதற்கு வரும் 27ஆம் தேதி  வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநர் பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தூத்துக்குடி மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) சேர ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிப்பதற்கு வரும் 27ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்திருப்பதால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 8ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அரசு ஒதுக்கீட்டின்படி, ஐ.டி.ஐ.களில் சேர w‌w‌w.‌s‌k‌i‌l‌l‌t‌r​a‌i‌n‌i‌n‌g.‌t‌n.‌g‌o‌v என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். எந்த மாவட்டத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்புகிறீர்கள் என்ற விவரம் குறிப்பிடுதல் வேண்டும். பல மாவட்டங்களில் உள்ள தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
மதிப்பெண் மற்றும் இன ஒதுக்கீட்டின்படி மாவட்ட கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் இதே இணையதளத்தில் வெளியிடப்படும். தரவரிசைப் பட்டியலின்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு விண்ணப்பித்த மாணவர்கள் தூத்துக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறார்கள். அப்போது, பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன், அசல் மாற்றுச் சான்றிதழ், எட்டாம் வகுப்பு , பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், அசல் சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, சிறப்புநிலை முன்னுரிமைச் சான்றிதழ்  இருப்பின் அதற்கான அசல் சான்று மற்றும் மேற்காணும் அசல் சான்றுகளின் நகல் 5 எண்கள், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 5 எண்கள் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0461- 2340133 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com