சுடச்சுட

  

  குலசேகரன்பட்டினத்தில்  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சார்பில்  செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  தமிழக மக்களைப் பாதிக்கும் மீத்தேன்,  ஹைட்ரோ கார்பன், அணுக்கழிவு மையம் போன்ற  திட்டங்களை நிறுத்த வலியுறுத்தி,  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு  எஸ்டிபிஐ கட்சி மாவட்டத் தலைவர் காதர் முகைதீன் தலைமை வகித்தார்.
  மாவட்ட நிர்வாகிகள் உஸ்மான், கௌது முகைதீன், அஜீஸ், மைதீன்கனி, காதர், ஹபீப் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்டிபிஐ மாநில பேச்சாளர் ஜாபர் அலி உஸ்மானி, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, உமர் ஆகியோர் பேசினர். 
  திருச்செந்தூர் தொகுதி தலைவர் தாஹிர் வரவேற்றார். குலசேகரன்பட்டினம் கிளைச் செயலர் அபுல் ஹசன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai