சுடச்சுட

  

  ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
  வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்தும், 18 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கான தீர்வு, தேவையான உதவிகளுக்கு சைல்டு லைன்-1098இல் தகவல் தெரிவிப்பது குறித்தும் பேசப்பட்டது.
  துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அல்லிக்கொடி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜோதிக்குமார், சைல்டு லைன் 1098 ஒருங்கிணைப்பாளர் காசிராஜன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட வட்டார அலுவலர் திலகா மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜா நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai