சுடச்சுட

  

  தொகுதி மேம்பாட்டு நிதியை குடிநீர் தேவைக்கு அதிகம் பயன்படுத்துவேன்: சண்முகையா எம்எல்ஏ

  By DIN  |   Published on : 26th June 2019 06:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தொகுதி மேம்பாட்டு நிதியை பெரும்பாலும் மக்களின் குடிநீர்த் தேவைக்கே பயன்படுத்துவேன் என ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி.சண்முகையா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
  ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மக்களின் குடிநீர் பிரச்னை, தெருவிளக்கு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் மற்றும் அதனை சரிசெய்வது சம்பந்தமாக ஒன்றிய அலுவலர்கள் மற்றும் கிராம ஊராட்சிகளின் செயலர்களுடன் எம்.சி.சண்முகையா எம்எல்ஏ ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது:
  "ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் குடிநீர் கிடைக்காமல் மக்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதிலும் பல்வேறு குறைகள் உள்ளன. அவற்றை நிறைவேற்ற ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், கிராம ஊராட்சிகளின் செயலர்கள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதில் ஏதேனும் குறுக்கீடுகள், நிதிப் பற்றாக்குறைகள் இருந்தால், அதுகுறித்து உடனுக்குடன் என்னை தொடர்புகொண்டு தெரிவித்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து நிறைவேற்றித் தர தயாராக உள்ளேன். என்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியை பெரும்பாலும் மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீர்த் தேவைக்கு பயன்படுத்துவேன் என்றார் அவர்.
  ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராமராஜன், ஒன்றிய பொறியாளர்கள், பணிகளின் மேற்பார்வையாளர்கள் மற்றும் ஒன்றியத்துக்குள்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளின் செயலர்கள் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai