சுடச்சுட

  

  உடன்குடி வைத்திலிங்கபுரம் அருள்மிகு உச்சினிமாகாளி அம்பாள், பட்டரை அம்பாள் திருக்கோயில் கொடை விழாவை முன்னிட்டு 508 திருவிளக்கு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
   இதையொட்டி திங்கள்கிழமை  திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இரவு 10 மணிக்கு அம்பாளுக் கு மாக்காப்பு அலங்காரத்துடன் தீபாராதனை, 11 மணிக்கு அம்பாள் திருக்கும்பத்தில் ஊர் பவனி நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு கண்டுகொண்ட விநாயகர் கோயிலில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டு  முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தது. பின்னர் அம்பாளுக்கு பாலாபிஷேகம்   நடைபெற்றது.  
  அதைத்தொடர்ந்து  அம்பாளுக்கு மகா தீபாராதனை, திருக்கும்பத்தில் ஊர் பவனி, காணிக்கை செலுத்துதல்  நடைபெற்றது. 
  இரவு 12 மணிக்கு அம்பாளுக்கு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனையும், தொடர்ந்து அம்பாள் பூஞ்சப்பரத்தில் பவனியும்  நடைபெற்றது. புதன்கிழமை காலை 10 மணிக்கு பொங்கலிடுதல், மஞ்சள் நீராடுதல் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai