சுடச்சுட

  

  ஸ்ரீவைகுண்டம் அணையில் பராமரிப்புப் பணிக்கு பயன்படுத்தாத  ஜல்லிக் கற்கள் அகற்றம்

  By DIN  |   Published on : 26th June 2019 06:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஸ்ரீவைகுண்டம் அணை பராமரிப்புப் பணியில் பயன்படுத்த முடியாத ஜல்லிக் கற்கள் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் உத்தரவின்படி செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டது.
   தாமிரவருணி ஆற்றின் ஸ்ரீவைகுண்டம் அணையில் பராமரிப்புப் பணி கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கியது. அணையில் தண்ணீர்வரத்து அதிகரித்தபோது  ஜல்லிக் கற்கள் உள்ளிட்ட பொருள்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன.  இதனால் பணி நிறுத்தப்பட்டு தற்போது பணி நடைபெற்று வருகிறது. 
  இந்நிலையில், அணையில் தரமில்லாத பொருள்களை கொண்டு பராமரிப்புப் பணி நடைபெற்று வருவதாக நிலத்தடிநீர் பாதுகாப்பு இயக்கத்தினர் புகார் தெரிவித்தனர். 
   இதைத் தொடர்ந்து, அணை பராமரிப்புப் பணிகளை பொதுப் பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ரகுநாத் நேரில் ஆய்வு செய்தார்.
  அப்போது,  அணையின் கீழ் பகுதியில் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட ஜல்லிக் கற்கள் சேகரித்து வைக்கப்பட்டு இருந்தன.
  ஆனால் அக்கற்கள் பணிக்கு பயன்படுத்தப்படவில்லை என ஸ்ரீவைகுண்டம் பொதுப் பணித்துறையினர் விளக்கம் அளித்தனர்.  எனினும், பயன்படுத்த முடியாத ஜல்லிக் கற்களை அப்புறப்படுத்த கண்காணிப்பு பொறியாளர் உத்தரவிட்டார். 
   இதைத் தொடர்ந்து, அணையின் கீழ்பகுதியில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த ஜல்லிக் கற்களை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai