30இல் கோவில்பட்டியில்  ஹாக்கி பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாதெமியில் ஹாக்கி விளையாட்டு பயிற்சிக்கு மாணவர், மாணவிகள் தேர்வு  இம்மாதம் 30ஆம் தேதி நடைபெறுகிறது.

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாதெமியில் ஹாக்கி விளையாட்டு பயிற்சிக்கு மாணவர், மாணவிகள் தேர்வு  இம்மாதம் 30ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து, நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் சண்முகவேல் வெளியிட்ட அறிக்கை:
கோவில்பட்டி கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் அங்கமான லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாதெமியில் ஹாக்கி விளையாட்டு பயிற்சி பெறுவதற்கு விளையாட்டு வீரர்கள் தேர்வு நடைபெறுகிறது.  இதில், கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலுள்ள பள்ளிகளில் பயிலும் 10 வயது முதல் 14 வயதுக்குள்பட்ட மாணவர், மாணவிகள் கலந்து கொள்ளலாம்.
 விருப்பமுள்ள மாணவர், மாணவிகளுக்கான தகுதித் தேர்வு இம்மாதம் 30ஆம் தேதி காலை 7 மணிக்கு கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறும்.  ஜூனியர் மற்றும் சப்ஜூனியர் ஆகிய 2 பிரிவுகளில் பயிற்சி பெறுவதற்காக தேர்வு செய்யப்படும் மாணவர், மாணவிகளுக்கு  ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயிற்சிகளும், பள்ளியின் காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை நாள்களில் தொடர் சிறப்புப் பயிற்சி வழங்கப்படும்.
பயிற்சிக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள், பயிற்சியில் பங்கு கொள்வதற்கு பேருந்து வசதிகள், மருத்துவ காப்பீடு, உணவு மற்றும் ஊட்டச்சத்து பானங்கள் அனைத்தும் பயிற்சி பெறும் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும். எவ்வித கட்டணமும் கிடையாது. 
சிறந்த பயிற்சி பெற்ற மாணவர், மாணவிகள் மாவட்ட, மாநில மற்றும் அகில இந்திய அளவில் நடைபெறும் பல்வேறு ஹாக்கி விளையாட்டுப் போட்டிகளில் லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாதெமி அணியின் சார்பில் பங்கு கொள்ள வாய்ப்புகளும், அதற்கான முழு செலவுகளும் அகாதெமியினால் வழங்கப்படும்.
எனவே, கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பள்ளிகளில் பயிலும் தகுதிப் பெற்ற, விளையாட விருப்பமுள்ள மாணவர், மாணவிகள் தங்களது பள்ளி அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவுள்ள போட்டோ ஆகியவற்றுடன் ஜூன் 30ஆம் தேதி வர வேண்டும். 
தகுதித் தேர்வில் கலந்து கொள்வதற்கு கல்லூரி சார்பில் பேருந்து வசதி அண்ணா பேருந்து நிலையம் அருகேயிருந்து  ஜூன் 30ஆம் தேதி காலை 6.30 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com