கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் இலுப்பையூரணி மற்றும் கிழவிப்பட்டி ஊராட்சி பகுதி மக்களுக்கு

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் இலுப்பையூரணி மற்றும் கிழவிப்பட்டி ஊராட்சி பகுதி மக்களுக்கு வேலை வழங்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் சந்தானம் தலைமையில் கூசாலிபட்டி பகுதி பொதுமக்கள் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பின்னர், போராட்டக் குழுவினர் கோரிக்கை மனுவை  ஒன்றிய ஆணையர் கிரியிடம் வழங்கினர்.   
பின்னர் போராட்டக் குழுவினர் கூறியது:  தங்கள் கோரிக்கை நிறைவேறாவிட்டால் ஜூலை 1ஆம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். 
கிழவிபட்டி: கோவில்பட்டி ஒன்றியத்துக்குள்பட்ட கிழவிபட்டி ஊராட்சியில் கிழவிபட்டி, செண்பகப்பேரி, துரைச்சாமிபுரம் பகுதி மக்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் வேலை வழங்க வலியுறுத்தி விவசாயத் தொழிலாளர் சங்க கோவில்பட்டி ஒன்றியப் பொறுப்பாளர் சித்ரா தலைமையில், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.
இதில், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க மாவட்டக் குழு உறுப்பினர் தெய்வேந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் மணிகண்ட சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலர் முருகன்,  ஒன்றியச் செயலர் ஜோதிபாசு, மாற்றுத் திறனாளி மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநிலச் செயலர் முத்துகாந்தாரி ஆகியோர் போராட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com