மாநகராட்சிப் பகுதியில் அத்தியாவசிய தேவைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்: எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

தூத்துக்குடி மாநகராட்சியில் மக்களின் அத்தியாவசிய தேவைகளைவிரைந்து நிறைவேற்ற வேண்டும்

தூத்துக்குடி மாநகராட்சியில் மக்களின் அத்தியாவசிய தேவைகளைவிரைந்து நிறைவேற்ற வேண்டும் என, அதிகாரிகளிடம் முன்னாள் அமைச்சரும், ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான எஸ்.பி.சண்முகநாதன் வலியுறுத்தினார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து சண்முகநாதன் எம்.எல்.ஏ. செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார். மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன் மற்றும் நான்கு மண்டல உதவி ஆணையர்கள், குடிநீர் விநியோக ஆய்வாளர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாநகரப் பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் செய்தல், பணிகள் நிறைவடையாமல் உள்ள சாலைப் பணிகளை விரைந்து முடித்தல், பக்கிள் ஓடையில் தேங்கியுள்ள நீர் மற்றும் கழிவுகளை சுத்தம் செய்தல், பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை விரைவுபடுத்துதல் உள்ளிட்ட பணிகள்குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என அதிகாரிகளிடம் சண்முகநாதன் எம்எல்ஏ வலியுறுத்தினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூத்துக்குடி மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான கருத்துகளை தெரிவித்தும் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் தட்டுப்பாடு இல்லாமல் சீரான குடிநீர் விநியோகம் வேண்டியும் ஆணையரிடம் மனு அளித்துள்ளோம். குடிநீர்த்  திட்டப் பணிகள், பொலிவுறு நகரப் பணிகள், பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள், சிதம்பரநகர் சந்தையை நவீனப்படுத்துதல், பக்கிள் ஓடை பராமரிப்பு போன்ற பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டோம் என்றார் அவர்.
அதிமுக முன்னாள் மாவட்ட செயலர் பி.ஏ.ஆறுமுகநயினார், அமைப்புசாரா ஓட்டுநர் அணி இணைச் செயலர் பெருமாள்சாமி, முன்னாள் வாரிய தலைவர் அமிர்தகணேசன், முன்னாள் நகரச் செயலர் ஏசாதுரை, மாநகரப் பகுதிச் செயலாளர்கள் பொன்ராஜ், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com