சாத்தான்குளத்தில் சத்துணவு ஊழியர்கள் சங்க பேரவைக் கூட்டம்
By DIN | Published On : 28th June 2019 07:14 AM | Last Updated : 28th June 2019 07:14 AM | அ+அ அ- |

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க சாத்தான்குளம் வட்டப் பேரவைக் கூட்டம் சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு சத்துணவு ஊழியர் சங்க வட்டாரத் தலைவர் அந்தோணி தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். வட்டார துணைத் தலைவர் அற்புதராஜ் வரவேற்றார். அனைத்துத் துறை ஒய்வூதியர் சங்க மாவட்ட இணைச் செயலர் ஜெயபால், கூட்டத்தை தொடங்கிவைத்தார். வட்டாரச் செயலர் முருகன், செயலர் அறிக்கையையும், வட்டாரப் பொருளாளர் தமிழ்ச்செல்வி பொருளாளர் அறிக்கையையும் தாக்கல் செய்தனர்.
தீர்மானங்களை முன்மொழிந்து வட்டார இணைச்செயலர் ஜெயச்சந்திரன், வட்டார துணைத் தலைவர் விஜயராணி ஆகியோர் பேசினர்.
இதில், ஊரக வளர்ச்சித் துறை சங்கத் தலைவர் ராஜேஷ், வருவாய்த்துறை அலுவலர் சங்கத் தலைவர் சுவாமிநாதன், கிராம நிர்வாக அலுவலர் சங்க சாத்தான்குளம் வட்டத் தலைவர் சுரேஷ்ராஜன், சாலைப்பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் முத்துராமலிலிங்கம், கிராம உதவியாளர் சங்க மாவட்ட இணைச் செயலர் ரவி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பாக்கியசீலிலி, மாவட்டச் செயலர் பொன்சேகர், மாவட்ட துணைத் தலைவர் தமிழரசன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், சத்துணவு ஊழியர்கள் அனைவரையும் முழுநேர அரசு ஊழியராக்க வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை உதியம் வழங்க வேண்டும். குடும்ப ஒய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் சார்லஸ் செல்வநாதன் நன்றி கூறினார்.