சுடச்சுட

  

  இந்திய இளையோர் ஹாக்கி அணியில் விளையாடுவதற்கு கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
  கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியின் வரலாற்றுத்துறை முதலாமாண்டு மாணவர் எஸ். கார்த்தி, மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற தேசிய இளையோர் ஹாக்கிப் போட்டியில் தமிழக அணி சார்பில் கலந்து கொண்டு விளையாடினார்.  இதில், கார்த்தி 7 கோல்கள் போட்டு தேசிய அளவில் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.
  இவர், பெங்களூருவில் நடைபெற்று வரும் தேசிய பயிற்சி முகாமில் கலந்து கொண்டுள்ளார். இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர் கார்த்திக்கு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ஏ.பி.கே.பழனிசெல்வம், கல்லூரிச் செயலர் எஸ்.கண்ணன், பொருளாளர் மகேஷ், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், முதல்வர் சிவசுப்பிரமணியன், உடற்கல்வி இயக்குநர் சந்திரன் உள்ளிட்டோர் பாராட்டினர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai