சுடச்சுட

  

  சாலை விபத்துகள் மூலமாக 80 சதவீதம் பேருக்கு மூளை பாதிப்பு ஏற்படுகிறது என்றார் கோவில்பட்டி தியான் ஹெல்த் கேர் மைய நிறுவனர் டாக்டர் சிவகுமார்.
  கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில், எஸ்.எஸ்.துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்ட மூளை விழிப்புணர்வு வார நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று அவர் பேசியது:
  உலகம் முழுவதும் மூளை விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படும் இந்நாளில், சாலை விபத்துகள் மூலமாக 80 சதவீதம் பேருக்கு மூளை பாதிப்பு ஏற்படுகிறது. தலைக்கவசம் அணிவதன் மூலம் மூளை பாதிக்கப்படுவதைத் தவிர்க்கலாம். எனவே, அனைவரும் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். பக்கவாதம் ஏற்பட்ட ஒருவரை 2 மணி நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றால், சிகிச்சை மூலம் 100 சதவீதம் அவரை குணப்படுத்திவிடலாம். பக்கவாதம் ஏற்பட்ட நபரை மருத்துவமனையில் அனுமதிக்க நாம் அனைவரும் உதவிசெய்ய வேண்டும் என்றார் அவர். 
  மேலும், மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்ட நபருக்கு வரக்கூடிய அறிகுறிகள் மற்றும் பெறவேண்டிய மருத்துவச் சிகிச்சை முறைகள் குறித்தும் மருத்துவர் சிவகுமார் பயிற்சி அளித்தார். 
  விழாவிற்கு ரோட்டரி சங்கத் தலைவர் ஆசியா ஃபார்ம்ஸ் பாபு தலைமை வகித்தார். ரோட்டரி சங்கச் செயலர் ரவிமாணிக்கம், கல்லூரிச் செயலர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க உறுப்பினர் முத்துமுருகன், தியான் ஹெல்த் கேர் மைய நிர்வாகி கிருஷ்ணபிரியா மற்றும் கல்லூரி மாணவர், மாணவிகள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  கல்லூரி முதல்வர் சிவசுப்பிரமணியன் வரவேற்றார். ஹெல்த் கேர் மைய மேலாளர் சஞ்சீவி காந்தி நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai