சுடச்சுட

  

  தூத்துக்குடியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  ஆர்ப்பாட்டத்தில், "பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும்; பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; பெண் அதிகாரிகளை நியமித்து விசாரிக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட  கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தூத்துக்குடி சிதம்பரநகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் வெங்கடேசன் தலைமை வகித்தார். இதில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai