சுடச்சுட

  

  தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான கலைப்போட்டியில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி அணி முதலிடத்தைப் பிடித்தது.
  தூத்துக்குடி வாகைகுளத்தில் உள்ள ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற இப்போட்டியில், 25 கல்லூரிகளில் இருந்து 350-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
  திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி மாணவ, மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனர். மேலும், பல்வேறு போட்டிகளில் பாளையங்கோட்டை சாராள் தக்கர் கல்லூரி, தூத்துக்குடி ஹோலி கிராஸ் கல்லூரி, தூய மரியன்னை கல்லூரி, கீழஈரால் தான் பாஸ்கோ கல்லூரி மாணவ, மாணவிகளும் பரிசுகளை வென்றனர். பரிசளிப்பு விழாவில், தூத்துக்குடி மாநகர காவல் துணை கண்காணிப்பாளர் ஆர். பிரகாஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, போட்டியில் வென்றோகுக்குப் பரிசுகள் வழங்கி பாராட்டினார். 
  நிகழ்ச்சியில், ராஜலட்சுமி கல்விக் குழுமத்தின் நிறுவனர் பி.ஏ. ஆறுமுகநயினார், செயலர் ஆறுமுகம் கிருஷ்ணகுமார், அறிஞர் அண்ணா ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் தாளாளர் ராஜலட்சுமி ஆறுமுகநயினார்,  கல்லூரியின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் சுமதி ஆறுமுகம், சுகன்யா சம்பத், ஜெயலலிதா, ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ராஜதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  மாநில கருத்தரங்கம்: இதேபோல, ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில், மாநில அளவில் பசுமை பற்றிய ஒருநாள் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற விநாடி-வினா போட்டியில் காமராஜ் கல்லூரி அணி முதல் பரிசையும், திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரி இரண்டாம் பரிசையும், ராஜலட்சுமி கல்லூரி மூன்றாம் பரிசையும் பெற்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai