சுடச்சுட

  

  வாசகம் எழுதும் போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடியைச் சேர்ந்த ரவிக்குமார் குடும்பத்துக்கு வசந்த் அண்ட் கோ சார்பில் வியாழக்கிழமை கார் பரிசளிக்கப்பட்டது.
  வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின் 41ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, கடந்த 1-6-2018 முதல் 31-8-2018 வரை பொருள்கள் வாங்கும் வாடிக்கையளர்களுக்கு வாசகம் எழுதும் போட்டி நடத்தப்பட்டது. இதில், தூத்துக்குடி ராஜீவ்நகரை சேர்ந்த ரவிக்குமார் குடும்பத்தினருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது.
  தூத்துக்குடி பாலவிநாயகர் கோயில் தெருவில் உள்ள வசந்த் அண்ட் கோ நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நிறுவனத்தின் முதல்மை அதிகாரி சண்முகசுந்தரம் காருக்கான சாவியை ரவிக்குமார் குடும்பத்தினரிடம் வழங்கினார்.
  இரண்டாவது பரிசாக சகாயமாதாபட்டினத்தைச் சேர்ந்த மொகைதீன் சம்சுதீன் குடும்பத்தினருக்கு எல்இடி டி.வி., 3ஆவது பரிசாக புதுக்கோட்டையை சேர்ந்த ஹெர்குலஸ் குடும்பத்தினருக்கு பிரிட்ஜ், 4ஆவது பரிசாக நாசரேத்தை சேர்ந்த வல்லபாய் ராஜய்யா குடும்பத்தினருக்கு மைக்ரோவேவ் ஓவன், 5 ஆவது பரிசாக புதுகிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் குடும்பத்தினருக்கு கேஸ் ஸ்டவ்,  6ஆவது பரிசாக குளத்தூரை சேர்ந்த ஆனந்தகுமார் குடும்பத்தினருக்கு ஃபேன், 7ஆவது பரிசாக அண்ணாநகரை சேர்ந்த மாரிமுத்து குடும்பத்தினருக்கு வாட்டர் ப்யூரிஃபயர் ஆகியவை  வழங்கப்பட்டன.
  நிகழ்ச்சியில், வசந்த் அண்ட் கோ நிறுவன தூத்துக்குடி கிளை மேலாளர் ஜெயக்குமார் மற்றும் ஊழியர்கள் டேனியல், கணேஷ், முனியசாமி, ராம சண்முகம், ஜெயந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai